Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிரில் கொடுத்த துள்ளல் மெலடி டூயட்டைப் போலவே இன்றும் ஒரு டூயட் பாடல் தான், ஆனால் இது வேறு காலம் வேறு வகை.

தனக்கென்று ஒரு பாணியை, தனி முத்திரையை ராஜா மெதுவாக ரசிகர்களிடையே பதித்துக் கொண்டிருந்த காலகட்ட பாடல் இது. இந்த பாடலின் ஆரம்பமே பிரம்மாண்டமாக வயலினும் குழலும் இணைந்து பரவசப்படுத்தும். ஆனால் புதிர் துணுக்காக அதை கொடுக்கவில்லை, வேறொரு இடையிசை தான் 🙂 கேளுங்கள்.

DirectLink

இந்த 30 விநாடி இசையில் எத்தனை வண்ணங்கள். பல்வேறு இசைக்கருவிகளை இணைத்து ஒரு மாபெரும் இசைக்கோலமே போட்டிருக்கிறார்.. இதெல்லாம் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் கோர்த்தவை அல்ல, ஒரே குழுவாக வாசித்தவை, எங்கே ஒரு இசை முடியவேண்டும் ஒரு இசை ஆரம்பிக்க வேண்டும் என்பதை எவ்வளவு சரியாக கணக்கிடவேண்டும், அதை மனதில் எப்படி உருவகப்படுத்தியிருக்க வேண்டும், அதை ஒரு இசைக்குழுவை வைத்து எப்படி உருவாக்கியிருக்கவேண்டும், திரை இசைக்கு வந்த பொழுதே இந்த திறமை அவருக்கு லாவகமாக வந்திருக்கிறது.

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

this song was sung by a Legendary singer who sung very few songs for IR along with the other singer who has sung a Lot in IR music 🙂

Answer: தேன் மல்லிப் பூவே – தியாகம் (Thenmalli poove – Thiyagam)