Tags
@anandhame, @balachidambara, @Baraneee, @dtwdty, @ikrishs, @i_vr, @Jsrigovind, @Kaarthikarul, @maestrosworld, @mayilSK, @pgramss, @Pramadth, @Qatarseenu, @ragavanpandian, @rajabalanm, @rmdeva, @usharanims, @vrsaran, shyam, Vignesh Subramanian
நேற்றைய கன்னடப்பாடல் மாதிரி இன்று ஒரு ஒரிய மொழி பாடல் கொடுக்கலாம் என்று முடிவு செய்து…..
🙂 சரி சரி. ஒடாதீங்க.. வாரத்தொடக்கத்தில் அந்த மாதிரியெல்லாம் செய்யமாட்டோம், இன்றைக்கு நம் தமிழ் பாடல் தான், அதுவும் 2000த்தின் காலகட்டத்திலிருந்து ஒரு பாடல். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் 80களின் ராஜாவிலே உறைந்து கிடக்கிறார்கள், பாவம் அவர்களுக்கு தேனருந்திய வண்டு பூவிலே மயங்கிவிட்டதை போன்ற நிலை. நமக்கு அப்படியெல்லாம் இல்லையே, மொத்தமாக காலபேதமின்றி அள்ளி பருகும் ஆசையில் இருக்கிறோமே.
மனதில் பெரும் ஆசைகளும் கனவுகளும் சுமந்து, அது அது அனைத்தையும் சாத்தியமாக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இளைஞன் – தன் முன்னே கிடைக்கவிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நினைத்து, அது திறக்கப்போகும் மாயலோகத்தை கணவு காணும் இடத்தில் வரும் பாடல். ஒரு கொண்டாட்டப்பாடல். இடையிசைகளில் வரும் தாளக்கட்டும் அந்த energyம் இன்னும் கொஞ்சம் சிரத்தையாக படமாக்கப்பட்டிருக்கலாம் தான். கொடுத்துள்ள இசைத்துணுக்கை கேளுங்கள் ஒரு கனவு தெரிகிறதா இல்லையா 🙂
பாடலுக்கு நடுவே சிறு உரையாடலிலும் பாடலின் பிற்பாதியிலும் நம்மவரின் குரல் மாற்றி செய்யும் குறும்புகள் வேறு உண்டு – பிச்சு உதறிடுவாரு 🙂
LifeLine Clue : Please select the text between the quotes below to see the hidden text clue
the movie with an actor/director as protagonist was produced by the son of yesteryear lyricists/writer/producer who was closely associated with Raja for long time
Answer: Please leave your answers in the comment section. Comments will be moderated and released along with the answer after 36 hours. Please mention your twitter handle in your comments
Answer: ஏலே எங்க வந்த – மாயக்கண்ணாடி