#365RQ2 – சீசன் 2 ஒரு பார்வை – Overall Positions & Statistics

வணக்கம். கடந்த 2013ம் ஆண்டு,  ஆகஸ்டு மாதம் 10ம் தேதி “எங்கள் முதல் வணக்கம்” என்ற பதிவோடு இந்த பயணத்தை துவக்கினோம்.  இந்த புதிர் 15 நாட்களுக்கு முன்னரே முடிந்து விட்டாலும், விடைகள் வெளியிடவும், வரிசைப் பட்டியல் வெளியிடவும் சிறிது தாமதமாகிவிட்டது. 365 நாட்கள் என்று நினைத்து தொடங்கிய இந்தப் பயணம், 385வது நாளில் முடிகிறது.

ஆம், அனைத்து புதிர்களுக்கும் விடை வெளியிட்டாகிவிட்டது. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வரிசைப் பட்டியல் இதோ வந்துவிட்டது. .

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், முதல் 10 இடங்களுக்கு தெளிவான முடிவுகள் இருப்பதுதான்.

 முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஒரு சிறப்பு  புத்தகப்பரிசு காத்திருக்கிறது. அது  உங்களின் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தயவு செய்து உங்களின் இந்திய முகவரியை  ட்விட்டரில் தனிச்செய்தியாக அனுப்பி வைக்கவும்.

இதோ மொத்த வரிசைப் பட்டியல் இங்கே –> https://dl.dropboxusercontent.com/u/63305574/365RQ2-OverallPostions.xlsx

முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் இதோ : அனைவருக்கும் வாழ்த்துக்கள்

@i_vr 365 1
@vrsaran 364 2
@maestrosworld 359 3
@rajabalanm 358 4
@Kaarthikarul 357 5
@usharanims 355 6
@Qatarseenu 354 7
@muthiahrm 329 8
@amas32 306 9
@Pramadth 245 10

 

Now time for some statistics (as on 30th Aug 2014)

385 Days

110 Participants 

371 Posts

11,793 Comments 

363 Songs

14 BGMs

334 Tamil Movie songs

8 Malayalam Movie Songs

7 Telugu Movie songs

6 Kannada Movie Songs

4 Hindi Movie songs

4 Song from Private Albums (2 Tamil and 2 Hindi)

3 Masters10397083_10152373022683751_8296945257585877774_o995606_10152355152804506_5559253719352486052_nprasan

1 Maestro raja

 

Thanks

#365RQ2 – நன்றி!

 

IR
நேற்றைய 365வது புதிருடன் இந்த ராஜ இசைப்புதிர் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ரெக்ஸ் மாஸ்டரின் புதிர் தொடரில் தொடர்ந்து பங்குபெற்றதின் மூலமாக அறிமுகமாகி, பின் அது நட்பாகி.. அந்த ஒரு வருடம் நமக்கு கிடைத்த அந்த அனுபவம் எந்தக்காரணத்தை கொண்டு தவறிப்போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்தால் உந்தப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் முடிவெடுத்து தொடர்சியாக இரண்டாம் சுற்று ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு மளமளவென எழுந்து வந்த இந்த தொடர், அதற்குள் ஒரு வருடம் கண்டுவிட்டது என்பதை நம்பவே சிரமமாகத்தான் இருக்கிறது.

ஒரு 365 நாள் புதிர்த்தொடர் என்று முடிவு செய்த அந்த முதல் வாரம் எங்கள் மனதில் இருந்த ஐயங்களும் தயக்கங்களும் முதல் புதிர் கொடுத்த உடன் காற்றில் கரைந்து விட்டது, பின்னர் எத்துனை அலுவல்கள் வந்த பொழுதும், பயணங்கள் வந்த பொழுதும், பெரிதாக திட்டம் எதுவும் போடாதபொழுதும், திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் தினமும் புதிர்பதிவுகள் வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஒரு ஆச்சர்யமான நிகழ்வு தான் 🙂 நேற்றைய பதிவில் சொன்னது போல், அதற்கு முழுமுதற்காரணம் ராஜ இசையன்றி வேறு எதுவுமில்லை என்று அறிந்தே இருக்கிறோம், அது போல.. இந்த புதிர் தொடருக்கு, ஏற்கனவே ரெக்ஸ்மாஸ்டர் உருவாக்கிவைத்திருந்ததை போன்ற ஒரு தரத்தை முழுமையாக கொடுக்கமுடியாவிட்டாலும், அவ்வப்பொழுது அவசர அடியாக அமைந்த சில பதிவுகளையும், மெருகேற்றப்படாத – துல்லிய ஒலித்தரத்தில் இல்லாத இசைத்துணுக்குகளை கொடுத்த பொழுதும், எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்காமல் – எல்லாத்தருணங்களிலும் எங்களுக்கு ஆதரவாக, நல்வார்த்தைகள் மட்டுமே சொல்லி எங்களை உற்சாகப்படுத்தி தொடர்ந்து இயங்க வைத்த அனைத்து சக ராஜ இசை ரசிக நண்பர்கள் தான்.

எங்கள் மூவருக்கும் இந்த 365 நாள் எனபது ஒரு முழு வாழ்வுக்கான நினைவாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை, அதை இனிமையான நினைவாக மட்டுமே வைத்திருந்ததில் உங்கள் அனைவருக்கும் முக்கியபங்குண்டு, அதற்காக உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

Thanks

நன்றி!!

நன்றி!!

நன்றி!!

நாளை முதல் ஒரு புதிய புதிர்தொடரை நமது நண்பர் சரண் அவர்கள் ஆரம்பிக்கவிருக்கிறார். அந்த புதிர்தொடரை இங்கே தொடருங்கள் 

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் அன்புக்கும் எங்கள் ராஜ நன்றிகள் 🙂

 

365/365 – #365RQ2 – எல்லாம் உறவு தான்!

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

365… ஒரு முழு வருடம். எத்துனை சந்தேகத்துடன் ஆரம்பித்தும் அது நடந்தே விட்டது. 😉

365
மாபெரும் சாதனை என்றெல்லாம் இல்லை, ஆனால் 365 என்பது நமக்கு, இந்த புதிர் தொடருக்கு ஒரு முக்கியமான மைல்கல் தான் . இது சாத்தியமானதற்கு – அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல தினம் தினம் தொட்ட இடத்திலெல்லாம் நமது ராஜ இசை தந்த அந்த ஆனந்த போதையை தவிர வேறு எதுவும் முதற்காரணமாக சொல்லமுடியாது. இந்த 365 எனும் மைல்கல்லை அடைந்ததை, நம் வழக்கம் போல ராஜ இசையுடன் தான் கொண்டாடவேண்டும், அதைத்தவிர வேறு எதுவும் நமக்கு வழக்கமில்லையே.. அந்த கொண்டாட்டத்திற்கான இசை தான் இன்றைய புதிர் இசைத்துணுக்கு. கேளுங்கள்.

இசை பாடலுடன் கொண்டாட்டங்கள் தொடரலாம், ஆனால் விடையை பின்னூட்டத்தில் கொடுக்க மறந்துவிடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்..

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

The famous actor who have a long association with IR, acted in dual role in this film

Answer:சொர்க்கம் மதுவிலே – சட்டம் என் கையில்

364/365 – #365RQ2 – வானம்பூமி யாவும் இங்கு நானாவேன்

Tags

, , , , , , , , , , , , , , , ,

என்ன மக்களே, நேற்றைய பாடலை கேட்டு துள்ளி ஆடினீர்களா இல்லையா? இன்றைய பாடலும் அப்படி ஒரு துள்ளல் ஆட்டம் போடவைக்கும் பாடல் தான், ஆனால் நேற்று நாம் கேட்ட இசைவகையில் இருந்து முற்றிலும் வேறு வகையாக 🙂 நீங்களே கேளுங்கள்

தன்னை மறந்து ஆட்டம் போட வைக்கும் மயக்கும் இசைதானல்லவா.. விடையை பின்னூட்டத்தில் கொடுத்துவிட்டு ஆடுங்கள் 🙂

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

 One other song from this movie have attained a cult status and played/sung almost in all functions involving IR 

Answer: மலைநாடு யாவும் என் வீடு – தாய் மூகாம்பிகை

363/365 – #365RQ2 – கண்ட கனவில் ஒரு பகுதி

Tags

, , , , , , , , , , , , , , , ,

ராஜ இசைப்புதிர் இரண்டாம் சுற்றில் இன்று கடைசி வாரம். கடைசிவாரத்திற்கென தனியான கருப்பொருள் எதையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் தேர்ந்தெடுத்து வைத்த பாடல்கள் அனைத்தும் அவையாகவே ஒரு கருப்பொருளில் அடைந்துவிட்டன 🙂 ஆம், கடைசிவாரம் என தேர்ந்தெடுத்த முத்துகளை கொடுப்போம் என்று வாரயிறுதி முழுவதும் பாடல்கேட்க ஆரம்பித்து கிறுகிறுத்து போனது தான் மிச்சம், வழக்கம் போல எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பமும், ஒரு பாடலை பிடித்து அடுத்த பாடல் என்று செய்யவேண்டிய வேலையை விட்டு முத்துக்குளித்து திளைத்தது தாம் மிச்சம். சரி தேடல் எல்லாம் வேண்டாம் என்று ஒரு ஐந்து நிமிடங்களிம் இந்த வாரத்திற்கான பாடல்களை எடுத்து இசையைக்கிள்ளி மேகத்தில் ஏற்றிவிட்டு எழுத உக்காந்தால், அந்த பாடலக்ள அதுவாக ஒரு கருப்பொருளில் தான் அடைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. சரி கருப்பொருளை கண்டுபிடிப்பது உங்கள் வேலை, நமக்கென்ன கவலை 🙂

இன்றைய புதிர் இசைத்துணுக்கை கேட்போம்

எழுந்து ஆடாமல் ஒழுங்காக இசையை கேட்டீர்களா? 🙂 உடனே விடையையும் உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமாக கொடுங்கள். நாம் இங்கே கொடுத்துள்ள இசைத்துணுக்கை விட இன்னும் அழகிய அற்புதமான இசைத்துணுக்கு பாடலில் உண்டு, கேட்டு களியுங்கள்.

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

This movie was produced by a production banner headed by a legendary director

Answer: ராஜா ராணி ஜாக்கி – நெற்றிக்கண்

அட்டகாசமான ஆடியோ இங்கே (Thanks to @_Drunkenmunk)

 

362/365 – #365RQ2 – தாங்காது பிரிஞ்சாலே

Tags

, , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். கடைசி முழுவாரத்தின் கடைசி நாள். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே மீதம். முன்னரே சொன்னதுபோல, தேரை இத்தனை தூரம் இழுத்து வந்துவிட்ட களைப்பும், மகிழ்ச்சியும் இருந்தாலும், மூணே நாள்தானான்னு ஒரு வருத்தமும் இருக்கு. இந்த புதிரின் மூலம் கிடைத்த பலவிதமான அனுபங்களும், வாழ்நாள் முழுதும் மறக்காதது. அதேபோல இந்த புதிரின் மூலம் கிடைத்த நட்புக்களும் வாழ்நாள் முழுதும் நீளும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

கடைசி வார துக்கம் யாருக்கும் இருக்கக்கூடாது என்பதால்தான் இந்த வாரக் கருப்பொருளை, “ராஜா பாடிய குதூகலப் பாடல்கள்” என்று தேர்ந்தெடுத்தோம். பலரும் ராஜா பாடிய பாடல் என்றாலே உள்ளத்தை உருக்கும், சோகப் பாடல்கள் (அ) தத்துவப் பாடல்கள்னு நினைக்கிறாங்க. ஆனால் அவர் இப்படி சோக்கான பாட்டுக்களும் பாடியிருக்காரு என்பதை பலருக்கும் நினைவு படுத்தும் விதமாகவும் இந்தக் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தோம்.  இந்த கருப்பொருள் உங்களனைவருக்கும் பிடித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எல்லா கருப்பொருள் போலவும் இந்த கருப்பொருளிலும் பலப்பல பாடல்கள். அதிலிருந்து தேர்ந்தெடுத்து கொடுப்பது ஒரு சவாலாகவே இருந்தது.

இன்று வந்திருக்கும் பாடல் இந்த கருப்பொருளின் கடைசிப்பாடலாக இருக்க மிகச் சிறந்த பாடல் என்பது என் கருத்து. வாங்க முதலில் இசையைக் கேட்கலாம்.

என்னங்க இடையிசையிலும் நடுநடுவே கமெண்ட் அடிச்சு கலக்கியிருக்காரில்லை. செமயா ஆட்டம் போட வைக்கும் ஒரு பாடல். இந்த பாடல் படத்தில் இருந்ததான்னு நினைவில்லைங்க. ஆனா இந்த ஆல்பத்தில் இருக்கும் அத்தனை பாடல்களும் முத்து. மற்ற பாடல்கள் அளவுக்கு இந்த பாட்டு ஹிட் ஆனதாகவும் தெரியவில்லை.  ஆனால் மற்ற ஹிட் பாடல்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இந்த பாடல்.

இந்த இடையிசையிலேயே உங்களுக்கு ஒரு மிக முக்கியமான க்ளூ இருக்கிறது. அதற்கு மேல் ஒரு க்ளூ தேவையே இல்லைன்னு நினைக்கிறேன். இல்லை நிச்சயம் வேணும்னு நினைக்கிறவங்க, கீழே இருக்கும் லைஃப்லைனைப் பாருங்க. வரும் வாரம் உங்களுக்கு வளமாக அமைய வாழ்த்துக்கள். கடைசி 3 பாடல்களில் முதல் பாடலுடன் நாளை சந்திப்போம். வணக்கம்

 

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

This movie’s director has worked as a Sanitary inspector before coming into movies

Answer: மச்சி மன்னாரு – என் உயிர்த் தோழன் 

361/365 – #365RQ2 – பக்தி வெள்ளம்

Tags

, , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்று கொடுத்த வெள்ளி விசேஷத்துக்கு உங்களின் அமோக வரவேற்பு வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி நீங்கள் செய்த அட்டகாசத்துக்கு நேற்றோடு முடிவுக்கு வந்ததுன்னும் சிலர் நினைச்சிருப்பீங்க. இதுக்கெல்லாம் பரிகாரமா இன்னிக்கு ஒரு சாமி பாட்டு கொடுத்திடலாம்னு நினைச்சு இந்த பாட்டை எடுத்து வந்திருக்கோம் 🙂 இன்னிக்கு பக்தி வெள்ளம் ததும்பும் இந்த பாட்டைக் கேட்டு செஞ்ச பாவத்தையெல்லம் போக்கிடலாம். 🙂

இந்த் பாட்டின் தனித்தன்மையே இந்த பாடகர் அதைப் பாடிய விதம்தான்.  செமயா பாடியிருப்பாரு.  இன்னோரு வரி சொன்னாலும் பாடல் தெரிஞ்சிடும், அதனால நேரடியா இசைக்கு போயிடலாம். 🙂

என்னங்க எப்படி இருந்தது இசை. என்னடா பக்தி பாட்டுன்னு சொன்னானே இப்படி இருக்கேன்னு நினைக்கிறீங்களா, இதுவும் ஒரு விதமான பக்திப்பாடல்தான். உங்களுக்காகவே கடைசியில் பாடகர் குரலையும் விட்டு வெச்சிருக்கோம். உங்களுக்கு கண்டுபிடிக்க உதவலாம்னு (சரியா வெட்டாததை இப்படித்தான் ஏதாவது சொல்லி சமாளிக்கணும்)

இந்தப் படத்தில் ஒரு மகா ஹிட்டு பாடல் வந்து மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இன்று நாம் கொடுத்திருக்கும் பாட்டும் அப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு பாட்டுதான்.  கண்டுபுடிச்சிரலாம்ல?

நாளை சந்திப்போமா?  வணக்கம்.

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

 This hero is the son of an yesteryear actor. His son is an actor too 🙂 

Answer: இந்த அம்மனுக்கு – தெய்வ வாக்கு

http://www.raaga.com/play/?id=165552

360/365 – #365RQ2 – தாகம் இன்று தீரும்

Tags

, , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்று நம் புதிரின் கடைசி வெள்ளி.  இன்று ஒரு அருமையான விசேஷப் பாடல். அதுவும் கருப்பொருளுக்கும் பொருத்தமான பாடலாகக் கொடுக்க வேண்டுமென்று நிறைய பாடல்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்த பாடல்.

தேடும் போது   எளிமையான பிரபலமான பாடலும் இன்னொரு அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு பாடலும் கிடைத்தது. உங்களைக் கடைசி வெள்ளியில் சிரமப்படுத்த வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் எளிமையான பிரபலமான பாடலைக் கொடுத்துவிட்டோம்.

இசையைக் கேளுங்கள்

எவ்வளவு குறைவான வாத்தியங்களுடன் அந்த சூழ்நிலையைக் கொண்டு வந்து விடுகிறார். அதுவும் முதலில் அந்த வரும் அந்த இசைக் கருவி (என்னது அது?) அந்தி சாயும் நேரத்தை நம் மனக்கண்ணில் கொண்டு வந்துவிடுகிறது. அந்த குழலும் ஒரு மயக்கமான சூழலை உணர்த்துகிறதில்லையா? 🙂 16 விநாடிதான் இசை ஆனாலும் செய்யவேண்டியதைத் தெளிவாகச் செய்துவிடுகிறது.

படத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டு.  இந்தப் படத்தில் அனைத்து ஆண் குரல் பாடல்களையும் நம்மவர்தான் பாடியிருப்பார் 🙂

நிச்சயம் இந்தப் பாடலை மிக மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். இந்தப்பாடல் இல்லாமல் வெள்ளி விசேஷம் நிறைவடையாது 😉 நாளை சந்திப்போம். வணக்கம்

 

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

The actress appearing in this song was introduced to movies by K Balachandar, in a super hit Telugu movie.  

Answer: சாமக்கோழி கூவுதம்மா – பொண்ணு ஊருக்கு புதுசு

359/365 – #365RQ2 – துன்பம் தீராதா?

Tags

, , , , , , , , , , , , , , , ,

வணக்கம். 3 நாட்களாக வந்த பாடல்களை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. கடைசி நாட்களுக்கு பொருத்தமான ஒரு கருப்பொருளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை எங்களுக்கு உங்களின் விடைகள் உணர்த்துகிறது. விடைகள்னு சொன்னவுடனே, கடந்த நாட்களின் பல விடைகள் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.  அதுக்கு முதலில் உங்ககிட்ட மாப்பு கேட்டுக்கிறேன்.  வேலையிலும், வீட்டிலும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு வேலைகள். விடை வெளியிட நேரம் ஒதுக்கவே முடியவில்லை. எப்படியும் இந்த வார இறுதிக்குள் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். பொருத்தருள்க 🙂

இன்று வருவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்தான். இதையும் புதிரில் கொடுக்க நாள் பார்த்து காத்திருந்தேன். இந்த கருப்பொருளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று இன்று கொடுத்தாச்சு. அப்படி என்ன இருக்கு இந்தபாட்டில்னு நீங்க கேட்கலாம். இதைவிட பலமடங்கு சிறப்பான பாடல்களை ராஜா நமக்கு தந்திருக்காரேன்னு நீங்க நினைக்கலாம். அது உண்மையாக இருந்தாலும், எனக்கு என்னவோ இந்த பாடலில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. இன்றளவிலும் அடிக்கடி கேட்கும் ஒரு பாடல். அதுக்கு காரணம் இந்த பாடல் படமாக்கப்பட்ட விதமாகவும் இருக்கலாம். எப்பொதெல்லாம் இதைக் கேட்கிறோனோ, அப்போதெல்லாம், அது என்னை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஆண்டு விழாவில் ஆடியது, நாடகத்தில் நான் பெண் வேடமிட்டு நடித்து, பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றதும் நினைவுக்கு வரும். சரி என் புராணம் போதும், பாட்டுக்கு போகலாம்.

Please note, as the file size is slightly bigger, it might take time to load in slow connections.

எத்தனையோ வாத்தியங்களை ராஜஇசையில் கேட்ட நாம் இதில் கை தட்டல்களையும் அவர் ஒரு வாத்தியமாக உபயோகித்திருப்பதைக் கேட்கலாம். தொடக்கத்தில் வரும் அந்த குழல் எனக்கு ரொம்ப இஷ்டம். 🙂  கடைசியிலும் அதிவேக குழலிசையைக் கேட்கலாம். இதெல்லாம் இருந்தால், நம்ம ஒரு ஆட்டம் போடாம எப்படி இருப்பது?

பாட்டு மிகவும் பிரபலமான ஒரு பாட்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட ஒரு பாட்டு. நிச்சயம் இது உங்களுக்கு கடினமாகவே இருக்காது. நாளை சந்திப்போம். வணக்கம்.

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

The actress introduced in this movie was later identified with this movie name itself..  

Answer: துப்பாக்கி கையில் எடுத்து – கோடை மழை 

358/365 – #365RQ2 – வட்டாரத்தில் புதுசு

Tags

, , , , , , , , , , , , , ,

வணக்கம். இரண்டு நாட்களில் வந்த பாடல்களை வைத்து உங்களில் சிலர் கருப்பொருளை ஓரளவு ஊகித்துவிட்டீர்கள். ஆனால் 100% சரியாக இன்னும் யாரும் ஊகிக்கவில்லை.  இன்று வந்திருக்கும் பாடல் அதை மிகச்சரியாக கண்டறிய உதவலாம்.

நேற்று வந்த பாடல் சிலரைக் கொஞ்சம் சுத்தவிட்டிருக்கிறது போலும். அதுக்கு காரணம் கொடுக்கப்பட்டிருந்த க்ளூதான்னு சொல்றாங்க. நான் என்ன செய்வது, பாட்டைப் பற்றி எவ்வளவு வேணும்னாலும் சொல்லலாம். படத்தைப் பற்றி சொல்வது கடினம், 😦 அதனால் ஒருபாடு கஷ்டப்பட்டு விஷயங்களைத் தேத்த வேண்டியிருக்கு. அப்படி கஷ்டப்பட்டு கொடுத்த க்ளூ உங்களுக்கு உதவும்னு நினைச்சுதான் கொடுக்கிறோம். குழப்ப அல்ல. அதை நீங்க நம்பணும் 🙂 🙂

இந்த பாடல் வந்த காலகட்டம் மக்கள் வேறு மயக்கதில் இருந்த காலகட்டம். அந்த காலகட்டத்தில் ராஜஇசையில் வந்த பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்த நினைவு இருக்கிறது. நானும் கொஞ்சம் கொஞ்சமாக ராஜஇசையில் மயங்கத் தொடங்கியிருந்த காலம். இந்தப் பாடலை ஆஹா ஓஹோன்னு கொண்டாடி தோழர்களுடன் கேட்ட நினைவிருக்கிறது. குறிப்பாக பாடல் பாடப்பட்ட விதம் அலாதி 🙂

இசைக்கு போயிடலாம்.  Please note, as the file size is slightly bigger, it might take time to load in slow connections.

என்ன ஒரு இசைங்க. தொடக்கத்தில் வரும் ரிதமோடு 5வது விநாடியில் இணையும் குழல் ஜாலம் காட்டுது. இதுல பார்த்தீங்கன்னா, ரெண்டு குழலோசை கேட்குது. இது நிஜமாவே ரெண்டு குழலா, இல்லை குழலோடு சேர்ந்த் வேறேதும் ஒரு இசைக்கருவியா? இல்லை ரெக்கார்ட் செய்யப்பட்ட விதமா? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

பாட்டைச் சொல்வது உங்களுக்கு எளிதாகத்தான் இருக்கும். பிரபலமான பாட்டுத்தான். படம்தான் பப்படம். ஓடலை.  வேறென்ன சொல்ல. இனி நாளை புதிய பாடலுடன், மீண்டும் உங்களை சந்திக்கின்றோம். வணக்கம்

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

The villain of this movie has recently directed a tri-lingual with Raja’s music

Answer: சின்னமணிக்காக – செந்தூரம் 

http://www.ilayaraja.in/tamil-songs/player.php?moviename=senthooram