Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேத்து பாட்டை கண்டுபுடிச்சிட்டீங்களா? எப்படி ரசிச்சீங்கன்னு உங்க விடைகளோடு சேர்த்து பகிர்ந்தால், இதே மாதிரி பாடல்களை கொடுக்கலாமா வேணாமான்னு எங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

இன்று உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. ஏன்னா, அப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டோ ஹிட்டு பாட்டுத்தான் கொடுத்திருக்கோம். அப்படி ஒரு அருமையான மனதுக்கு தெம்பளிக்கும் ஒரு பாட்டு.  இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் மனதுக்கு அப்படி ஒரு ஆறுதல் வரும்.

ராஜா இசை பற்றி நம்ம பார்த்துக்கிட்டேதான் வாரோம். இந்தப் பாடலில் பாடலாசிரியரையும் பற்றி கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். என்ன அருமையான வரிகள். இதில் அடிக்கடி வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பதிவுக்கு தலைப்பாக அதையே கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதைக் கொடுத்தால் நீங்க பாட்டை கேட்காமலே சொல்லிடுவீங்களே!!:-) அதான் தலைப்பை மாற்றியாச்சு.  இந்தப் பாடலை எழுதியது நம் இசை இளவல் அமரன் அவர்கள்தான்.

gaகங்கை அமரனை, ஒரு பாடலாசிரியராக ஏன் பலராலும் சீரியசாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது எனக்கு இன்று வரை ஒரு புரியாத விஷயம். 😦 இந்த பாடலின் வரிகளை கேட்கும்போது நீங்களும் புரிந்துகொள்வீர்கள்

பாட்டின் இசையை பற்றி நான் என்ன சொல்றதுங்க, எழுதணும்னு நினைக்கும்போதே புல்லரிக்குது. நீங்களே கேளுங்க

இந்த மாதிரி ஒரு இசையை அவர் கொடுத்தது 35 வருஷங்களுக்கு முன் எனபதை நினைக்கும்போது, அவர் மேதமை புரிகிறது 🙂

படமும் சூப்பர் ஹிட்டுதான். பாடல் ஒரு காலத்தில் ரேடியோவில் கேட்காத நாளே இல்லைன்னு சொல்லாம்.  இந்தப் பாட்டை தெரியாத ராஜா ரசிகரே இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை நீங்க கேட்டதில்லைன்னா, இந்த பாட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி 🙂

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

  The “whiskey-and-cigarette” discussion scenes & English dialogues were the highlight of this critically acclaimed movie with a mega star cast. Recently this movie was selected as one of the 100 greatest Indian movies of all time by a News Channel

Answer: உறவுகள் தொடர்கதை – அவள் அப்படித்தான் (Uravugal Thodargathai – Aval Appadithan)