Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய துணுக்கில் இயந்திர இசை ஆதிக்கத்தை கேட்டிருப்பீர்கள், இன்று நிஜ ஒலி வாத்திய பிரம்மாண்டம். பிரம்மாண்டம் என்றால் எப்படி, எல்லா வாத்தியங்களையும் ஒரு சேர அலற விடுவதா..  ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கொடுப்பதா, இல்லை, அந்த பாடலுக்கு அந்த சூழலுக்கு அந்த உணர்வுக்கு ஏற்றார்போல் எத்துனை வாத்தியக்கருவிகள் வாசித்தாலும் ஒவ்வொன்றும் தன் தனித்துவம் கெடாமல் இசைந்து, பாடகரின் குரலுக்கு மொழிக்கு இடைவிட்டு, தேவையான பாதிப்பை கேட்ப்பர்களுக்கு கொடுக்கவேண்டும்.. இதற்க்கு மத்தியில் ஒரு திரைப்பாடலுக்கான, திரையிசைக்கான அழகியலையும் விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் செய்துவிட்டு அங்கேங்கே சின்ன சின்ன சுவாரசியங்களையும் பொதித்து வைப்பது தான் ராஜா.

இன்றைய பாடல் சமீபகாலங்களில் ஒரு பெரும் சாதனைப்பாடல் தான். மொத்தமாக அந்த திரைத்தொகுப்பே சாதனை தான். முதல் சீசனில் ரெக்ஸ் மாஸ்டரின் புதிர் தொடரில் இந்த திரைப்படத்தில் இருந்து இன்னொரு பாடல் வந்துள்ளது, கொடுத்துள்ள இடையிசைகளை (ஆமாம் இரண்டு இடையிசைகள் உள்ளன இன்று) கவனியுங்கள்.

இந்த பாடலே காலமாற்றங்களை பற்றியது, கடந்த காலத்தின் பெருமையும் பின் வந்த வீழ்ச்சியும் அந்த வருத்தமும் அந்த பெருமையை மீட்கும் போராட்ட உணர்வுமாக பல்வேறு உணர்ச்சிகளை ஒரே பாடலில் வடித்து கொண்டுவருவது தான் இந்த பாடலின் களம். இந்த கால உணர்வு மாற்றங்களை ஒரு ஐந்து நிமிட இசைக்கோர்ப்பில் கொண்டு வந்து கொட்டிவிடுகிறார்.

உங்களுக்கு காதும் மனதும் சரியில்லாவிட்டால் இதை ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லை, சும்மா கையில் வந்ததை எழுதி வாசிக்க வைத்துவிட்டார் என்று சொல்லிக்கொள்ளலாம்.. சொல்லிக்குங்க.. எங்களுக்கு இன்னும் நிறைய பாட்டு கேக்கவேண்டி இருக்கு.. 🙂

இதுக்கு மேல எதுவும் எழுதினால் புதிருக்கு வழியில்லாமல், பாடலையே சொல்லிவிட வேண்டியிருக்கும்.. மிச்சத்தை மக்களே பின்னூட்டத்தில் வழங்குமாறு கேட்டுக்கொண்டு.. நன்றி! வணக்கம்! 🙂

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

 This highly successful Historical movie which had a mega star casting, won lot of national and regional awards

Answer: தமிழ் – ஆதி முதற்காலம் – பழசி ராஜா (Tamil – Aadhi Mudhal – Pazhasi Raaja)

மலையாளம் – ஆதி உஷஸ்ஸந்த்ய – பழசி ராஜா  (Malayalam – Aadhi Ushasandhya – Kerala Varma Pazhassi Raaja)