Tags

, , , , , , , , , , , , , , , , ,

நேத்து புதிரில் வந்தது நெறயப் பேருக்கு கஷ்டமாயிருக்குமேன்னு கொஞ்சம் அதிகமா க்ளூக்களை கொடுத்தா, சிலர்  இதெல்லாம் டை ப்ரேக்கரான்னு கிண்டல் செய்றீங்க. இன்னிக்கு பாருங்க க்ளூவே இருக்காது 🙂 🙂 🙂  அதாவது நேத்து மாதிரி நேரடியா க்ளூ இருக்காதுன்னு சொல்லவந்தேன்.

இன்னிக்கு நம்ம பார்க்கப் போற பாட்டு பாடல் வெளியான காலத்தில் ஓரளவு ஹிட்டாச்சு. அப்புறம் காலப்போக்கில் மறந்தேபோன ஒரு பாட்டு. சக மாஸ்டர் இந்தப் பாடலை கொடுக்கலாம்னு சொன்னதுக்குப் பிறகுதான் நான் கேட்டேன். அட, இந்தப் பாட்டை எப்படி மறந்தோம்னு நினைச்சேன். விடையை கண்டுபிடித்த பிறகு, உங்களில் பலரும் என்னை மாதிரித்தான் நினைப்பீர்களென்பது நிச்சயம். 🙂

இந்தப் படம் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால் இது இந்த ஹீரோவுக்கு அறிமுகப் படமாக இருந்திருக்கும். 🙂 பாடல்களெல்லாம் சூப்பரா இருக்கும். எல்லா பாடலகளும் எனக்கு புடிக்கும்னாலும், இங்கு வந்திருக்கும் பாட்டும், SPB, Chitra பாடிய இன்னொரு பாட்டும் அதிகம் கேட்டதுண்டு.  அந்த பாட்டைத் தேர்ந்தெடுக்காமல் இந்தப் பாட்டை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் இந்த இடையிசைதான்.

அருமையான மெலடியான இந்தப் பாட்டில் சரணங்களில் வாத்தியங்களே அதிகம் இருக்காது. ஆனால் பல்லவி/அனுபல்லவியிலும், இடையிசையிலும் வித்தியாசமான இசையை கேட்கலாம். அதில் ஒன்றுதான் இங்க இருக்கு. கேளுங்களேன்

முதல் 10 செகண்ட் வரை கிடாரும், fluteம் மெதுவாகத் தொடங்கி 11வது விநாடியிலிருந்து அப்படியே வேகமெடுக்குது. கடைசியில் ஹம்மிங் வேற சேர்ந்துக்குது. அதை அப்படியே புடிச்சு போனீங்கன்னா பாட்டை கண்டுபுடிச்சிடலாம்.  உதவிக்கு கீழே வழக்கம் போல லைஃப்லைன் க்ளூவும் இருக்கு.

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

Hero’s real life father was the director of this movie. Hero of this movie is a director now 🙂

Answer: உன் பேரைக் கேட்டாலே – பூஞ்சோலை (Un Perai Kettale – Pooncholai)