Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

இன்று வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை ராமசாமிகளுக்கும் கண்ணாம்பா, மனோகராக்களுக்கும் நேற்றே தீனி போட்டாச்சு என்றாலும், பாரம்பரியத்தைக் காப்பாத்தணுமே 🙂 அதுக்காக இன்னிக்கு “வழக்கமான” பாட்டுதான்

இந்தப் படம் ஒரு அருமையான படம்னு அனைவராலும் பாராட்டப் பட்ட ஒரு படம். இந்த critically acclaimedம்பாய்ங்களே அதுமாதிரி ஒரு படம். ஆஹோ ஓஹோன்னு ஊரே பேசிச்சு. சுமாரான படத்துக்கே சூப்பர் இசை கொடுப்பவர் நம்ம ராசா. இந்த மாதிரி நல்ல படத்துக்கு சொல்லவா வேணும், கலக்கலோ கலக்கல்தான். பாட்டுக்களெல்லாம் சூப்பர் ஹிட்டு, ஒருத்தருக்கு இந்தப் படத்தில் பாடிய பாட்டுக்காக தேசிய விருதே கிடைச்சதுன்னா பாத்துக்கோங்க 🙂

ஆனாலும் இன்னிக்கு நம் புதிரில் கொடுத்திருக்கும் பாட்டு அனைவராலும் விமர்சிக்கப் பட்டது. ஏன்னா பாட்டு ஒரு பக்கா குஜால் பாட்டு, வரிகளும் எல்லாம் இரட்டை அர்த்தம். கமர்ஷியல் காரணங்களுக்காக இயக்குநர் விட்டுக்கொடுத்திட்டாருன்னு அவரை எல்லாரும் விமர்சிச்சாங்க. அதை விடுங்க, நமக்கு ஒரு நல்ல பாட்டு கிடைச்சது அதான் முக்கியம்.

இது ஒரு கிராமத்து திருவிழாவில் வரும் பாட்டுத்தான். ஊரில் நடக்கும் திருவிழாவில் நடக்கும் ஆட்டம் பாட்டம், இந்த சூழ்நிலையில்தான் இந்தப் பாட்டு வரும். நீங்க இசையைக் கேளுங்க. ஷெனாய் என்ன போடு போடுதுன்னு பாருங்க.

இந்த ஷெனாயை ராஜா எல்லா கிராமத்து திருவிழா பாட்டுக்கும் உபயோகிச்சிருக்கார். நம்ம ஊர் திருவிழாக்களில் நம்ம ஊதும் “பீப்பீ” மாதிரி. 🙂

ஒளிப்பதிவாளரா இருந்த இந்தப்பட இயக்குநர் இயக்கிய முதல் படம் இது. முதல் படமே இந்தமாதிரி இருந்ததும், மக்கள் இவர்கிட்டேயிருந்து நிறைய எதிர்பார்த்தாங்க. ஆனா இவர் பேசிய அளவுக்கு நல்ல படங்கள் தரலை. ஆனா தவறாமல் ஏதாவது ஒரு காரணதுக்காக மீடியாவில் வந்திருவார்.

இப்பொதான் இதுவரை எழுதியதை முழுசா படிச்சு பார்த்தேன், எவ்வளவு க்ளூக்கள் இருக்கு. படம் பேரும், பாட்டுந்தான் சொல்லலை. மத்த எல்லாம் சொல்லியாச்சு. இதுக்கு மேல என்ன லைஃப்லைன் க்ளு தருவதுன்னு எனக்கு புரியலை. உங்களுக்கு அது தேவையும் படாது. இருந்தாலும் ஏதோ முயற்சிக்கிறேன் 🙂

Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue

One of the leading ladies of this movie, has been awarded with Chevalier of the Ordre des Arts et des Lettres by the Government of France 🙂

Answer: குருவி கொடஞ்ச – அழகி (Kuruvi Kodanja – Azhagi )